ஆறு ஆண்டுகளாக சவுதியில் பணியாற்றிய கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த 28 வயதான விஷ்ணு தேவா ராதாகிருஷ்ணன் ஜூன் 7, 2018 தேதி சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தியதற்கும் மற்றும் மதத்தையும், தேசத்தையும் விமர்ச்சித்ததற்காகவும் சவூதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டார் . செப்டம்பர் 13, 2018 அன்று, ஐந்து வருட சிறைதண்டனை மற்றும் 1,50,000 சவுதி ரியால் (தோராயமாக ரூ 28,50,000) அபதாரம் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை குறைக்க மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி, தண்டனையைத் 10 ஆண்டுகளாக அதிகரித்து தீர்ப்பு வந்துள்ளது.

கடவுள்கள் பற்றிய விவாதம்
அவரது தந்தை ராதாகிருஷ்ணன் நாயர் கூறுகையில், விஷ்ணு தேவ் ட்விட்டரில் லண்டனில் உள்ள ஒரு முஸ்லீம் பெண்ணுடன் நட்பாக இருந்தார். அந்த பெண் சிவன் மீது ஏதோ தவறாக பேசினார். அவரது வாதத்தை எதிர்த்து, இவரின் மகன் முகம்மது நபிகளை விமர்சித்து ட்வீட் செய்தார் மற்றும் அவரின் கடவுள் இரக்கமுள்ளவர் என்றால், ஏன் யேமன் பள்ளிகள் குண்டு வீசப்பட்டன என்று கேட்டார் என முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரியான ராதாகிருஷ்ணன் கூறினார்.

சவுதி அராம்கோவின் துணை நிறுவனமான நாசர் எஸ் அல்-ஹஜ்ரி கார்ப்பரேஷனில் விஷ்ணு தேவ் பணியாற்றினார். தங்கள் மதத்திற்கு எதிரான எந்தவொரு பதிவும் சவுதி அரேபியாவில் ஒரு பெரிய குற்றமாகும். தற்போது அவரது தந்தை ராதாகிருஷ்ணன் நாயர், வெளியறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சசி தரூர் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here