கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்னாள் அமைச்சர் சித்தாரமையா ஒரு பெண்ணின் கையில் இருந்து மைக்கை தட்டிவிட்டு துப்பட்டாவை பிடித்து இழுத்த வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், முன்னாள் காங்கிரஸ் பஞ்சாயத்து அதிகாரி, ஜமலர், சித்தராமையா மைசூருவுக்கு வந்த பொழுது, யாரும் அவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என புகார் தெரிவித்தார்.

அவர் இந்த கேள்வியை எழுப்பியபோது, ​​சித்தராமையா, அவர் வரும்போது தெரிவிக்க உங்களுக்கு கடிதங்கள் எழுத முடியாது. நான் வந்த போது (அலுவலகத்திற்கு) நீங்கள் வந்து என்னை சந்திக்க வேண்டும்.” என்று கோபமாக கூறினார்.

பின்னர் நியூஸ் 9 உடன் பேசிய ஜமலர்,வருணா எம்.எல்.ஏ. (சித்தாரமையாவின் மகன் யத்திந்த்ரா) இங்கு வருகையில் பஞ்சாயத்து மற்றும் தாலுகா உறுப்பினர்கள் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதை சித்தராமையாவுக்கு தெரிவிக்க விரும்பினேன். ”

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, சித்தாரமையா ட்விட்டரில் “வருணாவில் இன்று நிகழ்ந்த சம்பவம் ஒரு நீண்ட பேச்சை தடுக்க முயற்சித்தபோது, ​​நடந்த விபத்து. எந்தத் தவறான நோக்கமும் இல்லை, 15 ஆண்டுகளாக கட்சியில் என்னுடன் இணைத்து வேலைசெய்யும் அந்த பெண் என் சகோதரிக்கு சமமானவர்” என்று அவர் ட்வீட் செய்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here