தமிழகத்தில் ஓஎன்ஜிசியை எதிர்த்து எந்த போராட்டமும் நடைபெறவில்லை என பொய்யான பிராமண பத்திரத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது இதற்க்கு ஆதரவாக தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என டெல்லியில் கோரிக்கை விடுத்துள்ளதை பேராசிரியர் த.ஜெயராமன் அம்பலப்படுத்தியுள்ளார்

தமிழக மண்ணையும் மக்களையும் காக்க துடிக்கும் பேராசிரியர் த.ஜெயராமன் மீது தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் தமிழக அரசால் பதியப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசும் அமைச்சர்களும் இந்த திட்டத்திக்கு ஆதரவாக இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என குடியரசு தின விழாவில், ஓஎன்ஜிசியின் காரைக்கால் காவிரிப் படுகை பிரிவு மேலாளர் மிஸ்ரா பேசியுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது. இதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளதும் தவறானது. ஹைட்ரோகார்பன் திட்டம் என்பது ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் உட்பட அனைத்து வகை எண்ணெய் எரிவாயுவையும் எடுக்கும் திட்டமாகும். அபாயகரமான நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்திதான் ஹைட்ரோகார்பனை எடுக்க முடியும். காவிரிப் படுகையில் மட்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க 7,000 ச.கி.மீ பரப்பளவுக்கு மேல் ஏலத்தில் விடப்படுகிறது. இதில் ஓஎன்ஜிசி, வேதாந்தா முக்கிய பங்கு வகிக்கிறது.” – என்கிறார் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here