திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ், சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 25-ம் தேதி சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

‘தன் மரணத்துக்கு சென்னை போலீஸார்தான் காரணம்’ என்று கூறி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தார். அதில் சென்னை அண்ணா நகர் சிக்னலில் நிற்கும்போது 2 போலீஸார் தனது காரை தாக்கியதாகவும், பெண் பயணி இருப்பதையும் பொருட்படுத்தாமல் தன்னை போலீஸார் தரக்குறைவாக திட்டியதாகவும் அதில் ராஜேஷ் குறிப்பிட்டிருந்தார். திருவொற்றியூரில் சாலை யோரம் நின்றிருந்தபோது,தனது டாக்ஸியின் சக்கரத்தை பூட்டிய போலீஸார் ரூ.500 லஞ்சம் பெற்றதாகவும், ரசீது கேட்டதற்கு கீழ்த்தரமான கேட்ட வார்த்தைகளில் திட்டியதாக கூறியிருந்தார். இதுபற்றி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தீவிர விசாரணை நடத்தி, 4 வாரத்துக்குள் விரிவான பதில் அளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இதைத் தொடர்ந்து, சென்னை மேற்கு இணை ஆணையர் பி.விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போலீஸார் யார் என தனிப்படை போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

யார் அந்த குற்றவாளி காவலர்கள்?

இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக 64 போலீஸாரின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், எந்தப் போலீஸாரும் தன் குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன. அதில், ஒரே ஒரு சிக்னலில் மட்டும் ஒரு போக்குவரத்து போலீஸார் தெரிகிறார். மற்ற கேமராக்களில் எந்தப் போலீஸின் உருவமும் பதிவாகவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட போலீஸாரை அடையாளம் காண்பதில் தனிப்படைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடைசியாக ராஜேஷ் காரில் சவாரி வந்த ஐ.டி. நிறுவன பெண் ஊழியரை போலீஸார் கண்டுபிடித்து விசாரித்தனர். அவர் கூறிய தகவல்கள், சம்பந்தப்பட்ட போலீஸாரை அடையாளம் காண உதவவில்லை என்று கூறப்படுகிறது. இதுவும் தனிப்படை போலீஸாருக்கு சிக்கலை ஏற்படுத் தியுள்ளது. சம்பந்தப்பட்ட காவலரை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்வோம் என்று தனிப்படை போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ராஜேஷ் இறப்புக்கு காரணமான போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோல எதிர் காலத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போது குடிசை மற்றும் ஆட்டோவிற்கு தீ வாய்த்த போலீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. டாஸ்மாக்கு எதிரான போராட்டத்தில் பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரிக்கு சில மாதங்களில் பதவி உயர்வு கொடுத்தது தமிழகரசு. மேலும் ஒருவேளை அந்த குற்றவாளி காவலர் கண்டுபிடிக்கப்பட்டாலும் என்ன தூக்கிலா போடப்போகிறார்கள்? தமிழக காவல்துறையின் உயர்ந்தபட்ச தண்டனையான இடமாற்றமே செய்யப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here