01-02-2019 அன்று கதிராமங்கலத்தில் 2017-ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தால் ஓஎன்ஜிசி பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் 1-02-2019 அன்று காவல்துறை குவிக்கப்பட்டு ஓஎன்ஜிசியின் பணிகள் தொடர இருந்த நிலையில் பேராசிரியர் த. செயராமன் அவர்கள் என்ன நடக்கிறது என்று விசாரித்துக்கொண்டிருக்கையில் அடாவடியாக தள்ளி பேராசிரியர் த. செயராமன் அவர்களை கைது செய்து இருக்கிறது காவல்துறை.

எடப்பாடியின் அமைச்சரும், அதிமுக தலைமைலான தமிழக அரசும் காவேரி படுக்கையை அழிக்கும் இந்த ஹைட்ரொ கார்பன் திட்டதிற்கு ஆதரவாக செயல் பட்டுவருவதை அம்பலப்படுத்தியிருந்தார்.

லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளைகளில் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளுக்கு கால் கடுக்க வெயில் நின்று பாதுகாப்பு அளிக்கும் இந்த காவல்துறை, இந்த மண்ணை காப்பாற்ற போராடும் ஒரு பேராசிரியரிடம் மனிதத்தன்மை இல்லாமல் நடந்துக்கொள்தை பார்த்தால், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுவது தெரிகிறது. என்றாவது ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது அவர்களையும் இதே போல் நடத்தினால், அன்று மக்கள் அனைவரும் பெருமையாக சொல்வார்கள் இது எங்கள் தமிழக காவல்துறை என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here