மதுரை: மதுரையில் லாரி ஓட்டுநரிடம் மிரட்டி லஞ்சம் லஞ்சம் பெற்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் சிக்கிய 3 காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே மணல் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரை மிரட்டிக் காவல் உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், முருகதாஸ், காவலர் மலை பிரகாஷ் ஆகிய மூவரும் லஞ்சம் வாங்கினர். இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், மிரட்டி லஞ்சம் வாங்கிய 3 பேரையும் மதுரை நகர் ஆயுதப் படைக்கு மாற்றி மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் உத்தரவிட்டுள்ளர். இதுபோல் ஆதாரத்துடன் மாட்டிய காவலர்களை நிரந்திரமாக பணிநீக்கம் செய்யாமல் இருப்பதுதான் காவல்துறையில் லஞ்சம் தலைவிரித்தாட காரணமாக இருக்கின்றது. குறைத்த பட்சமாக வழக்கு பதிவு செய்து வழக்கு முடியும் வரை தற்காலிக பணிநீக்கம் செய்தால் தான் இது போன்ற சம்பவங்கள் குறையும்.