மதுரை: மதுரைலிருந்து தூத்துக்குடி செல்லும் சுற்று சாலையில் சரியான ஆவணகளோடு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி நெடுஞ்சாலை பாதுகாப்பு (Highway Patrol) காவல்துறையினர் லஞ்சம் கேட்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து ஏர்போர்ட் வழியாக தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாதுகாப்பிற்காக ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், முருகதாஸ், காவலர் மலை பிரகாஷ் தங்களது வாகனத்தில் அமர்ந்தபடியே மணல் லோடு ஏற்றி செல்லும் லாரி கிளீனரிடம் லஞ்சமாக பணம் பெறும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த லாரியின் கிளீனர் தமிழக காவல்துறை அதிகாரியிடம் 100 ரூபாய் கொடுப்பதும் அதற்கு 200 ரூபாய் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதும் மேலும் அரைப்பாடி லாரியில் மணல் ஏற்றி வந்தாலே 500 ரூபாய் தர வேண்டும் என உரிமையாக, தமிழக அரசின் செலவில் ஜீப்பில் சென்று பிச்சை எடுப்பது காவல்துறையில் மேலும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.