கடந்த 01/02/2019 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் .த.செயராமன், கதிராமங்கலம் போராட்டக்குழுவின் ராஜூஆகியோருக்கு ஜாமீனும் மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பெண் போராளிகள் சித்ரா செயராமன், கலையரசி, செயந்தி ஆகியோருக்கு முன் ஜாமீனும் பெறப்பட்டது.

இது பற்றி அவரது வழக்கறிஞர் கூறுகையில், “பேராசிரியர் .செயராமனை ஒடுக்க நினைத்து , கதிராமங்கலம் காத்திருப்புப் போராட்ட 365 ஆம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 25 பேர்கள் மீது போடப்பட்ட வழக்கில் கைது செய்வதாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அவ்வழக்கிற்கும் பிணை மனு தாக்கல் செய்து, எங்கள் தரப்பு வாதங்களை ஆதாரங்களோடு எடுத்துவைத்து ஓ.என்.ஜி.சி ..யின் முகத்திரையை கிழித்தெறிந்தோம்.

உண்மையில் வழக்குப் பதிந்து கைதுசெய்யப்பட வேண்டியவர்கள் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளும் , அரசு அதிகாரிகளுமே என்று கூறியபோது நீதிமன்றமே அதனை ஆமேதித்தது. இந்த அரசும், ஓ.என்.ஜி.சி..யும் ,செயராமனை ஆயுள் முழுவதும் சிறையிலடைத்தாலும், உயிர்பிரிவதற்கு முன் ஒருநாள் கிடைத்தாலும் அன்றும் உங்களை எதிர்த்துப் போராடுவார் ஒடுங்கிவிட மாட்டார்” என்று நீதிமன்றதில் கூறினேன். உண்மைப்போராளிகள் ஒடுக்குமுறைக்கு அஞ்சுவதில்லை.” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here