சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைக்கேடுகளை ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறது அறப்போர் இயக்கம். ஆனால் சில காண்ட்ராக்டர்கள், அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். ஆனால் அவர்கிளின் அரசியல் பின்புலத்தை பற்றி கவலை படாமல் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்கள்.
இன்று அறப்போர் வெளிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சி டெண்டர்களில் செட்டிங் செய்து மக்களின் வரிப்பணம் கொள்ளை போவதை ஆதாரங்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அவர்களிடம் புகார் கொடுத்தும் 3 மாதங்களாக இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செட்டிங் செய்த கான்டராக்டர்களை தடை செய்யாமல், செட்டிங் டெண்டர்களை ரத்து செய்யாமல் ஊழல்வாதிகளை பாதுகாப்பது ஏன்? கார்த்திகேயன் சார், நீங்க சென்னை மாநகராட்சிக்கு கமிஷினரா? அல்லது ஊழல்வாதிகளுக்கு கமிஷினரா?” என கேள்வி ஏழுப்பியுள்ளனர்.
Corporation Commissioner OR Corrupt Commissioner
சென்னை மாநகராட்சி டெண்டர்களில் செட்டிங் செய்து மக்களின் வரிப்பணம் கொள்ளை போவதை ஆதாரங்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அவர்களிடம் புகார் கொடுத்தும் 3 மாதங்களாக இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செட்டிங் செய்த கான்டராக்டர்களை தடை செய்யாமல், செட்டிங் டெண்டர்களை ரத்து செய்யாமல் ஊழல்வாதிகளை பாதுகாப்பது ஏன்?கார்த்திகேயன் சார், நீங்க சென்னை மாநகராட்சிக்கு கமிஷினரா? அல்லது ஊழல்வாதிகளுக்கு கமிஷினரா?
Posted by Arappor – அறப்போர் இயக்கம் on Sunday, February 10, 2019