பழனியில் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் தி.மு.க நகர துணை செயலாளர் சக்திவேல் ரகளை செய்த காணொளி வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் I.P. செந்தில்குமாரை விழாவிற்கு ஏன் அழைக்கவில்லை எனக்கேட்டு மாணவிகள் முன்பு ரகளையில் ஈடுபட்டார்.
ஆளும் கட்சியாக திமுக இருந்தபொழுது பொதுமக்களின் சொத்துக்களை மிரட்டி வாங்கியதாக புகார் எழுந்ததையடுத்து படுதோல்வி அடைத்த திமுக இதுவரை ஆட்சியை பிடிக்கமுடியவில்லை. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஓசி பிரியாணி கேட்டு தாக்கியது, டீ கடையில் காசு கொடுக்காமல் பிரச்சனை செய்த பொழுது படம் எடுத்த பத்திரிகையாளரை தாக்கியது, கோவில் வாசலில் உள்ள கடையில் இருந்த பெண்ணை தாக்கியது என மீண்டும் மீண்டும் பிரச்சினையில் அக்கட்சியினர் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.