ஈஷா யோகாவின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது யானையின் வழித்தடத்தில் உரிய அனுமதி இன்றி கட்டிடங்களை கட்டியது, இவர்களால் விற்கப்படும் பொருட்களுக்கு வரி ரசீது கொடுக்காமல் நன்கொடை ரசீது கொடுத்து வருமானவரி துறையை ஏமாற்றுவது என பல புகார்கள் கூறப்பட்டாலும் அவரின் ஆதரவாளர்களின் என்னி க்கை நாளுக்குநாள் அதிகரித்து தான் வருகின்றது. அத்தனைக்கும் ஆசைப்படும் இந்த யோகா குரு, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகின்றார்.
குறிப்பாக மகாசிவராத்திரி வந்துவிட்டால் இவரை கையில் பிடிக்கமுடியாது பிரதமர், ஜனாதிபதி, முதலமைச்சர், கவர்னர் போன்ற முக்கிய தலைவர்களில் சிலரை அழைத்து வந்துவிடுவார். கூடவே சில பிரபல சினமா நடிகைகளும் வந்துவிடுவார்கள்.
Delighted to meet @SadhguruJV. pic.twitter.com/87bkRKOthh
— Narendra Modi (@narendramodi) October 3, 2017
மிக குறைந்த கட்டணம் நிறைவான காட்சி
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள நன்கொடை என்னும் பெயரில் வாங்கப்படும் கட்டணம் ஆயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை மட்டுமே. அதிமாக நன்கொடை அளிப்பவர்கள் சத்குருவை அருகில் பார்க்கலாம். குறைத்த நன்கொடை அளிப்பவர்கள் கடைசியில் அமர்ந்து பார்க்கலாம். குறைத்து ஐந்து லட்சம் பேர் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள், அப்படியென்றால் இந்நிகழ்ச்சியால் அவர்கள் ஈட்டபோகும் வருமானத்தை நீங்களே சிந்தித்து பாருங்கள்.
இலவச அனுமதி?
ஆம் பொதுமக்களுக்கு இலவச அனுமதியும் உண்டு. ஆனால் கடந்த முறை இவர்கள் நாற்காலி இல்லாமல் தரையில் அமர்ந்து தூரத்தில் இருந்து சத்குருவை கண்டுகளித்தார்கள்.
இருளில் சிவன் கோவில்கள்
ஸ்டெர்லைட் போன்ற கார்பொரேட் கம்பெனிகளுக்காக குரல் கொடுக்கும் இது போன்ற யோகா குருக்களிடம் பணத்தை அள்ளி கொடுக்காமல், விளக்கு ஏற்ற கூட பணம் இல்லாமல் இருளில் இருக்கும் சிவன் கோவில்கள் பல தமிழ்நாட்டில் உள்ளது. அக்கோவில்களுக்கு திருப்பணி செய்தால் என்ன அந்த இறைவன் நமக்கு அருள மாட்டாரா என்ன? உதாரணமாக தஞ்சை அருகே உள்ள காசவௗநாடு கோவிலூர் என்னும் கிராமத்தில் உள்ள ஐம்புகேஸ்வரர் ஆலயதில் மூலவர் சன்னதியை தவிர பிற இடங்களில் விளக்கிற்கு கூட வசதியில்லை. மின் விளக்கும் கூட இல்லாமல் இருளில் தான் பிற சன்னதிகள் இருக்கும். இது போன்ற சிவ ஆலயங்கள் பல தமிழக கிராமகளில் இருக்கின்றன. இது போன்ற கோவில்களில் கூட நாம் திருப்பணி செய்து மஹாசிவராத்திரியை கொண்டாடலாமே!