திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசலில் 42 -ஆவது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வரும் நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரியாப்பட்டினம் கிராமத்தில் 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நீடித்தது. விவசாயிகள் மேற்கொண்டு வரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று சனிக்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசின் சீமை சாராய கடைகளை தவிற கடையடைப்பு:
போலீஸார் அனுமதி மறுத்த நிலையிலும் இரவு, பகலாக காத்திருப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேதாரண்யம் சட்டப் பேரவை தொகுதியளவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி வேதாரண்யம், மருதூர், ஆயக்காரன்புலம், வாய்மேடு, மருதூர், கரியாப்பட்டினம், தாணிக்கோட்டகம், குரவப்புலம், தென்னம்புலம், தகட்டூர், கருப்பம்புலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேசமயத்தில், தமிழக அரசின் சீமை சாராயத்தை விற்கும் டாஸ்மாக் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டோக்கள் ஓடவில்லை. மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
மோடியின் பணத்தாசைக்கு துணைபோகிறாரா எடப்பாடி?
பிரதமர் நரேந்திரமோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டவிரோதமாக பணத்தை நன்கொடையாக அளித்த நிறுவனங்களில் ஒன்றான வேதாந்தாவும் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பயன் அடைய போகிறது. இதனால் பாரதிய ஜனதாவிற்கு என்ன பலன் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றோம். பாரதிய ஜனதாவின் தமிழக பிரிவாக செயல்பட்டுவரும் இந்த அதிமுக அரசும் இத்த திட்டத்தை செயல்படுத்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது காவல்துறையை ஏவி வருகின்றது. உதாரணமாக தமிழக காவல்துறையால் தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னணியில் வேதாந்தாவும், காவல்துறை உயரதிகாரிகளும் இருப்பதை அம்பலப்படுத்திய திரு.முகிலன் காணாமல் ஆக்கப்பபட்டுள்ளார். உளவுதுறையின் தீவிரக்கண்காணிப்பில் இருப்பவர் காணாமல் போய்யுள்ளர் என்றால், “உளவுத்துறையின் தோல்வி, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் அல்லது குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளே கடத்தி இருக்கலாம்” இதில் ஏதோ ஒரு காரணம் தான் இருக்கமுடியும்.
நக்சலைட் மற்றும் தீவிரவாதியான விவசாயிகள்?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் இயங்கும் காவல் துறை நேற்று நள்ளிரவில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகளை பிடிப்பது போல் காவல்துறைனர்கள் குவிக்கப்பட்டு சுற்றிவளைத்து கைது செய்து நீதிமன்றக்காவலில் அடைக்க பட்டுள்ளார்கள். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த போராட்டம் தொடர்ந்தால் இது ஆளும் கட்சிகளுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலும், இந்த திட்டத்தை நிறைவேற்றப்போகும் தனியார் நிறுவனங்கள் பாரதிய ஜனதாவிற்கு அளிக்க இருக்கும் தேர்தல் நிதியில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காவே போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை அச்சுறுத்தவே நள்ளிரவு கைது நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.