திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசலில் 44ஆவது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டம் நடந்து வரும் நிலையில், இன்று டிஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்க பட்டுள்ளநிலையில், தேர்தல் நடத்தை விதிகளை காட்டியும், ஹைட்ரொ கார்பன் திட்டம் அமல்படுத்தப்படாது என உண்மைக்கு புறம்பான தகவலை கூறியும், கைது செய்வோம் என மிரட்டியும் போராட்டத்தை கைவிட வேண்டும் என போராடும் விவசாயிகளிடம் காவல்துறையினர் கூறினார்.

ஆனால் கைது செய்யப்படுவதற்கு விவசாயிகள் அஞ்சுவதாக தெரியவில்லை. கைது செய்யப்பட்டால் தேர்தலில் இது ஆளும் மத்திய மாநில கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனமான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here