440 ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் என்றால் பொது மக்களுக்கு ஆச்சிரியமாக தான் இருக்கும் ஆனால் உண்மை. பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் பாராளமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவரிடம் 745 கிராம் தங்கம் இருப்பதாகவும் அதன் ஒரு கிராம் மதிப்பு ரூ440 என்று கணக்கிட்டு மொத்த மதிப்பாக ரூ.3,27,800 என தெரிவித்துள்ளார். மேலும் தன் மனைவியிடம் 875 கிராம் தங்கம் இருப்பதாகவும் அதன் ஒரு கிராம் மதிப்பு ரூ.460 என்று கணக்கிட்டு மொத்த மதிப்பாக ரூ.4,02,500 எனவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளி மிகவும் மலிவு:
தன்னிடமும், தன் மனைவியிடமும் மொத்தமாக 31.5 கிலோ வெள்ளி இருப்பதாகவும் அதன் மதிப்பு கிராம் ரூ 6.19 என கணக்கிட்டு மொத்த மதிப்பாக ரூ.1,95,030 எனவும், தங்களிடம் உள்ள 19 கார்ட் வைரத்தின் மதிப்பு ரூ1.79 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்னொரு அதிசயம்:
இவர் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு கிராம் கூட வாங்கவும் இல்லை, விற்கவும் இல்லை. ஆம் 2016ம் சட்டமன்ற தேர்தலில் திருத்தணி தொகுதியில் போட்டியிட்ட இவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவிலும், இதே அளவு தங்கம், வெள்ளி வைரம் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் மதிப்பும் கடந்த நான்கு ஆண்டுகளில் உயரவில்லை. மாற்றம் முனேற்றம் அன்புமணி என்ற தேர்தல் பிரச்சாரம் மாறிவிட்டது. டயர் நக்கி என்று பா.மா.காவால் விமர்ச்சிக்கப்பட்ட முதல்வரும் சிறந்த முதலமைச்சர் ஆகிவிட்டார், பாமகவின் வேட்ப்பாளரிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு மற்றும் மாறாதது ஆச்சிரியமாக தான் உள்ளது.
2001-02ம் ஆண்டுகளுக்கு பிறகு இது வரை தங்கத்தில் விலை ரூ.440க்கு விற்கப்படவில்லை. மேலும் தற்போதயை தங்கத்தில் விலை ரூபாய் மூவாயிரத்தை தாண்டிவிட்டது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலையும் நாற்பத்தி ஒன்றை தொட்டுவிட்டது.