காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்ததன்பேரில் காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது காவல்துறை அதிகாரிகளின் துணையுடன், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொலை என்பதை சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆதாரமாகக் காட்டி கடந்த பிப்ரவரி 15ம்  தேதி தெளிவாக விளக்கியிருந்தார் முகிலன். அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையம் சென்றவர் அதன் பின்னர் காணவில்லை.

இந்நிலையில் தான் முகிலனுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தன்னை முகிலன் பலவந்தப்படுத்தியதாகவும் தான் மறுத்தபோது திருமணம் செய்துக்கொள்வதாக கூறி நம்ப வைத்து பல முறை உறவு கொண்டதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அவர்மீது, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் ஐபிசி பிரிவு 417 (ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம்) மற்றும் 4(H) பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளகாதலா ? கற்பழிப்பா?

முகிலன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது அனைவருக்கும் தெரியும், திருமணம் செய்துக்கொள்வதாக கூறியதை நம்பி உறவு கொண்டதாக இந்த பெண் கூறுவதை எப்படி கற்பழிப்பாக கருதமுடியும்? இதை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளன. உதாரணமாக Sham Singh Vs The State of Haryana வழக்கை எடுத்து கொள்ளலாம். திருமணமான ஒருவர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறியதை நம்பினேன் என்பதன் மூலம் அந்த பெண் தெரிந்தே கள்ளக்காதலில் ஈடுபட்டதாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

முகிலன் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் போன நிலையில் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில், முகிலனால் குற்றம் சட்டப்பட்ட அரசியல்வாதிகள் இருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here