கரூர்: சின்னவீடாக பாக்யராஜ் படத்தில் நடித்த அப்போதைய கவர்ச்சி நடிகை பபிதாவை, தற்போது யாருக்கும் இவரை தெரியவில்லை. அதனால் “பாக்யராஜ் படத்தில் சின்னவீடா வந்தேனே.. அது நான்தான்” என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்டு கரூரில் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிடுகிறார்.
“இத்தனை முறை ஆட்சியில் திமுக இருந்தும் ஏதாவது திட்டத்தை முறையாக செயல்படுத்தினாங்களா? ஆனால் இதுவே அம்மா ஆட்சியில், சத்துணவு திட்டம், பசுமை வீடுகள், முதியோர் உதவித் தொகை, அம்மா உணவகம், 20 கிலோ ரேசன் அரிசி.. இப்படி எத்தனையோ திட்டங்கள் இன்றுவரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என்று கூறிப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னாள் இளைஞர்களின் வாக்கை பெறமுடியுமா?
முன்னாள் கவர்ச்சி நடிகையைவைத்து, முன்னாள் இளைஞர்களின் வாக்கை பெறமுடியுமா? என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.