நீதிமன்றங்களில் தங்களை “மை லார்ட்” என்று அழைப்பதால் சில நீதிபதிகள் தங்களை கடவுள்களாகவே நினைத்து கொள்கிறார்களோ என்னவோ? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய உத்திரவு பிறப்பிக்கபட்டு இருக்கின்றது. இந்த உத்தரவின்படி நீதிமன்றத்தில் “நீதிபதிகள் செல்லும் போது அலுவலர்கள் குறுக்கே செல்ல கூடாது. நீதிபதிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களை பார்த்தவுடன் அவர்கள் செல்லும் வரை நின்று அவர்களுக்கு உயரிய மரியாதையை செலுத்த வேண்டும்.” என்று உயர்நீதிமன்ற பதிவாளர் உத்திரவிட்டுள்ளார்.
இந்த உத்திரவை பல வழக்கறிஞர்கள் விமரிசித்து வருகிறார்கள். தமிழகத்தில், தங்களின் எளிமையால் பாராட்டப்படும் நீதிபதிகள் பலர் இருகின்றார்கள். ஆனால் உள்ளாடையை சரியாக ஊழியர் துவைக்கவில்லை, மயில் கண்ணீரில் வழியாக இனப்பெருக்கம் செய்கின்றது என்றும் கூறும் நீதிபதிகளை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.