டி.ஆர்.பாலுவின் குடும்பத்திற்கு சொந்தமான கிங்ஸ் கெமிக்கல்ஸ் அண்ட் டிஸ்டிலரீஸ் என்னும் ஏரிசாராய கம்பெனியை தஞ்சை அருகே உள்ள வடசேரியில் நிறுவினார்கள். அதனால் சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டும் என மக்கள் போராடினார்கள்.

நம்மாழ்வார் போராட்டம்:

இந்த ஆலையை எதிர்த்து வடசேரி விவசாயிகளுடன் இணைந்து நம்மாழ்வார், தாம்பரம் நாராயணன் உள்ளிட்டோர் போராடி வந்தனர். அப்போது திமுக ஆட்சி நடைப்பெற்று வந்தது. எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது, 2010ல் தாக்குதல் நடத்தி, ஆலையை அனுமதித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இதில், பாதிக்கப்பட்ட மக்கள், ஏப்ரல், 9ம் தேதியை கறுப்பு தினமாக, ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். தற்போது அமுமுக சார்பாக தாம்பரம் நாராயணன் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவை எதிர்த்து போட்டியிடுகின்றார்.

தஞ்சையில் தோல்வி :

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர்.பாலுவை எதிர்த்து வடசேரி மக்கள் பிரச்சாரம் செய்து தோற்கடித்தார்கள். எதிர்ப்பு காரணமாகவே மீண்டும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடாமல் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகின்றார் எனத்தெரிகின்றது. தற்போதுவடசேரி போராட்டம் தொடர்பாக டி.ஆர்.பாலுவிற்கு எதிராக தாம்பரம் நாராயணன் ஆதரவாளர்களால் பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

கோல்டன் வாட்ஸ் சாராய ஆலை

இந்த ஆலை மன்னார்குடி அருகே இயங்கி வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு கூட இந்த ஆலையின் கழிவால் மாடுகள் இறந்ததாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த ஆலையின் இயக்குனர் திரு.கோவிந்தசாமி குமரவேல். இவர் சில மாதங்களுக்கு முன்பு  வரை “ARISTO TELENET PRIVATE LIMITED” என்னும் நிறுவனத்திற்கும் இயக்குனராக இருந்தார். இந்த நிறுவனத்தின் பிற இயக்குனர்களாக இருந்தவர்கள் டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினர்கள்.

மேலும் Golden Vats, Aristo Telenet, Meenam Fisheris, Kings India Power ltd, Meenam Exports Ltd உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் முகவரியும் “272, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை” என்பதே ஆகும். இதன் மூலம் டி.ஆர்.பாலுவிற்கு நெருக்கமானவர்களே இந்த சாராய ஆலையையும் இயக்கி வருகின்றார்கள் என்று தெரிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here