தென் ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கக் கூட்டத்தால் விரட்டப்பட்ட காட்டு எருமை ஒன்று ஆற்றில் இறங்கி தப்ப முயன்றது. ஆனால் ஆற்றில் இருந்த முதலையிடம் அகப்பட்டு தப்பி கரைசேர்ந்தது.
கரையில் இருந்த சிங்க கூட்டத்திடம் போராடிய அந்த எருமையை ஒரு எருமை கூட்டம் வந்து காப்பாற்றியது. பார்வையாளரால் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகின்றது.