மும்பை தீவிரவாத தாக்குதல் பொழுது தீவிரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி ஹேமந்த் கராரே சுட்டு கொல்லப்பட்டார். அவருக்கு போரில் வீரதீர செயலுக்கு வழங்க கூடிய உயரிய விருதான அசோகா சக்ரா விருது அளித்து கவுரவித்தது இந்திய அரசு.

மரணத்தில் சர்ச்சை:

அரசு குடுத்த தரம் குறைந்த புல்லட் புரூப் ஜாக்கெட் பயன்படுத்தியதால் மரணம் அடைந்தார் எனவும். அவர் உடம்பில் பாய்ந்து சென்ற துப்பாக்கி குண்டு கைப்பற்ற பட்ட தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுடன் ஒத்துப்போகவில்லை எனவும் செய்திகள் வெளியாகின.

சாபத்தால் மரணம்?

மாலேகான் குண்டுவெடிப்பில் ஹேமந்த் கராரேவால் கைதுசெய்யப்பட்ட  இந்து சாமியார் சாத்வி பிரக்யா சிங், தற்போது பிஜேபி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார். “தன்னை கைது செய்து துன்புறுத்தியதால், தான் அளித்த சாபத்தால் தான் ஹேமந்த் உயிர் இழந்ததாக”, சாத்வி கூறியுள்ளார் இதற்க்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தனது கருத்தை திரும்ப பெறுவதாக சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here