திபிலீசி:  தந்தை மற்றும் சகோதரர்களால் தாக்கப்படுவதாகவும்,  சவுதி அரேபியாவின் சட்டங்கள் பெண்களை பாதுகாப்பதாக இல்லை. என கூறி  சவூதி அரேபியாவை சேர்த்த இரு சகோதரிகள் வீட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு ஜார்ஜியா நாடு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறிய மஹா மற்றும் வஃபா-அல்-சுபாய் என்ற இரு சகோதரிகள் ஜார்ஜியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்தபடியே சகோதரிகள் இருவரும் தங்களை பற்றிய தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு ஐநா மற்றும் மனிதஉரிமை ஆணையத்திடம் உதவி கோரியிருந்தனர்.

 

சவுதியில் உள்ள பெண்களுக்கு எதிரான சட்டத்திட்டங்களை தாங்கள் வெறுப்பதாக, ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருந்தனர். அவர்கள் வெளியிட்டிருந்த வீடியோவில், நாங்கள் தற்போது ஆபத்தில் உள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது குரல் எழுப்புகிறோம். எங்களை எந்த நாடாவது ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தங்களது பாஸ்போர்ட்டை சவுதி அரசு முடக்கிவிட்டது. தற்போது நாங்கள் ஜார்ஜியாவில் இருக்கிறோம். எங்களை தேடி பெற்றோர்கள் ஜார்ஜியாவிற்கே வந்து விட்டனர். பெற்றோர்கள் அழைக்கிறார்கள் என்பதற்காக நாங்கள் சவுதி திரும்பினால், அந்நாட்டு சட்டப்படி நாங்கள் நிச்சயம் கொல்லப்பட்டு விடுவோம் என கண்ணீருடன் கூறியிருந்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here