சீனாவிடம் இருந்து சவூதி அரேபியா வாங்கிய விங் லாங் ஆளில்லா விமானத்தை ஏமனில் ஹவுதி போராளிகள் சாட பிராந்தியத்தில் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஏமனில் அரசுக்கும், ஹவுதி போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இதில் அரசுக்கு ஆதரவாக சவூதி உள்ளிட்ட சுன்னி முஸ்லீம் நாடுகள் போரிட்டு வருகின்றது. இதில் போராளிகளை தாக்குவதற்கும், உளவு பார்ப்பதற்கும் இந்த சீன தயாரிப்பு  உளவுவிமானத்தை பயன்படுத்தி வருகின்றது. இதே விமானத்தை பாகிஸ்தானும் வாங்கி பயன்படுத்தி வருகின்றது.

 சாட பிராந்தியத்தில், ஹவுதி போராளிகள் விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஹவுதி போராளிகளுக்கு ஈரான் மறைமுகமாக உதவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here