கூர்க்கா வீரர்களின் பாரம்பரிய ஆயுதமான  குக்ரி கத்திகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் ஒரு மிக சிறிய கூர்க்கா வீரர்களின் படை அணி, பாகிஸ்தானின் ஒரு படை பிரிவின் தலைமையகத்தை கைப்பற்றி பாகிஸ்தான் வீரர்களிடம் மரண பயத்தை உருவாக்கியவர்கள். இங்கிலாந்து, இந்திய மற்றும் நேபால் ராணுவத்தில் பணியாற்றும் இவர்களின் முக்கிய ஆயுதம்இந்த குக்ரி கத்திகள் தான்.

Courtesy:ANI

உத்தராகண்ட மாநில தலைநகர் டேஹ்ராடூனில் இயங்கி வரும் “சதீஷ் குக்ரி” என்னும் 100 வருட பாரம்பரியம் மிக்க கடையில் தான் இந்திய ராணுவத்திற்கான குக்ரி கத்திகள் செய்யபடுகின்றன. தற்போது அமெரிக்க ராணுவத்திக்காக 60 குக்ரி கத்திகள் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

4 தலைமுறைகளாக இந்த தொழில் செய்து வரும் சதீஷ் குக்ரி கடையின் உரிமையாளர் விகாஸ் தாபா கூறும் போது “அமெரிக்க கமாண்டோ பிரிவிற்கு 60 குக்ரி கத்திகள் செய்யும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. பத்து வருடங்கள் முன்பு வரை சராசரியாக 15-20 ஊழியர்கள் வரை இருந்தனர் ஆனால் தற்போது 5 பேர் கிடைப்பதே கடினமாக உள்ளது. இதனால் இன்றைய சூழலில் 98% குக்ரிகள் இயந்திர உதவியால் தான் தயாரிக்கபடுகின்றன” ஆனால் கையால் செய்யப்பட்ட குக்ரி கத்திகள் தான் அதிகம் உழைக்கும் தன்மை கொண்டவை” என்றார் விகாஸ்.

அமெரிக்க ராணுவமும், இந்திய ராணுவமும் உத்தரகாண்ட் மாநிலம் ராணிகேட்டில் இணைந்து போற்பயிற்சி மேற்கோண்ட போது நம் கூர்க்கா வீரர்கள் வைத்திருந்த குக்ரி கத்தியால் அமெரிக்க படையை சார்ந்த அதிகாரி ஒருவர் மிகவும் கவரப்பட்டார்.

Courtesy: ANI

சில நாட்களுக்கு முன்னர் என் கடைக்கு வந்த அந்த அமெரிக்க சிறப்பு படை அதிகாரி அவர்களுடைய கத்தியை விட குக்ரி மிகவும் அற்புதமாக இருப்பதாக கூறி வியந்தார். பின்னர் இயந்திர உதவியோடு செய்யப்பட்ட குக்ரியையும் ,கையால் செய்யப்பட்ட குக்ரியையும் காண்பித்த போது கையால் செய்யப்பட்ட குக்ரியை தேர்வு செய்தார். இந்த குக்ரி கத்திகள் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க மரைன்ஸ் சிறப்பு படை வீரர்களால் பயன்படுத்தப்பட உள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டதாகவும் முதல் கட்டமாக 60 குக்ரிகளுக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது, எதிர்காலத்தில் இன்னும் அதிகமான குக்ரி கத்திகள் வாங்கப்படும் என்று கூறியதாகவும் விகாஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் , ஆஸ்திரேலியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பரிசளிக்கும் வகையிலான குக்ரி கத்திகளை ஏற்றுமதி செய்திருந்தாலும் தற்போது தான் நேரடியாக ஒப்பந்தம் கிடைத்துள்ளது என கூறினார்.

Courtesy: ANI

இங்கு சுமார் 450 ருபாய் முதல் 16000 ருபாய் மதிப்பிலான குக்ரி கத்திகள்  செய்யப்படுகிறது , அளவை பொருத்தவரை 6 அங்குலம் முதல் 22 அங்குலம் வரையிலான கத்திகள் செய்யப்படுகின்றன. முழுவதும் கையால் செய்யப்படும் குக்ரி  கத்திகளின் விலை அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here