இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காலனியில் தேவேந்திர குல வேளாளர் 100 குடும்பத்திற்கும், மேலும் சக்கிலியர் சாதியை சேர்த்தவர்கள் 40 குடும்பமும் வசித்து வருகிறார்கள். சிறுபான்மையாக வசிக்கும் சக்கிலியர்கள்
தண்னீர் பிடிக்க செல்லும் போது பெண்களை கேலி செய்து தகாத வார்த்தையில் பேசிய தேவேந்திர குல வேளாளர் சாதி சேர்ந்தவர்களை, சில இளைஞர்கள் கண்டித்துள்ளார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பத்திற்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து, சக்கிலியர் வாழும் பகுதிக்குள் புகுந்து கண்னில் பட்டவர்களை எல்லாம் தாக்கி இருக்கிறார்கள். அரிவாளால் சங்கர் சந்தவழியான் மற்றும் இரண்டு பெண்களை கொடூரமாக தாக்கியுள்ளது இந்த கும்பல்.
இந்த தாக்குதலை நடத்திய தேவேந்திர குல வேளாளர் மற்றும் தாக்கப்பட்ட சக்கிலியர் சாதியும், பட்டியல் சாதிப்பிரிவில் வருவதால் அரசியல்வாதிகளும், பிற சாதி கட்சிகளும் இதை பெரிது படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.