இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்தி குறிப்பில், இமயமலை தொடரில் உள்ள மக்காலு மலை சிகரத்தில் மலை ஏறும் பயிற்சியின் போது ‘எட்டி'(Yeti) எனப்படும் பனி மனிதனின் காலடியை கண்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த காலடி 32 அங்குல நீளமும் 25 அங்குல அகலமும் இருந்ததாக கூறியுள்ளனர். மேலும் இந்த காலடி தடம் தாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு மிக அருகில் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

இது போன்ற பனிமனிதனின் காலடியை மக்காலு மற்றும் பாரன் தேசிய பூங்கா அருகில் மட்டுமே பார்க்க முடியும் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் காலடி நீளம் அதிக பட்சமாக பன்னிரண்டரை அங்குலம் வரை இருக்கும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட காலடி தடத்தின் நீளம் 32 அங்குலமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here