பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திலகவதி என்ற மாணவி நாடக காதல் கும்பலால் குத்திகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும்.” என குறிப்பிட்டுளார். நேரடியாக எந்த இயக்கத்தையோ காட்சியையோ அவர் குறிப்பிடவில்லை.
விருத்தாசலம் கீழ்ப்பவளங்குடியில் திலகவதி என்ற மாணவி நாடக காதல் கும்பலால் குத்திகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும். இத்தகைய கொடூரங்களை கண்டிக்க தமிழகத்தில் எந்த தலைவருக்கும் மனம் வராதது கொடுமை. விரிவான அறிக்கை நாளை.
— Dr S RAMADOSS (@drramadoss) May 9, 2019
நாடக காதலா? திருமாவளவன் பதில்
இதற்கு பதிலளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், “மருத்துவர் ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகளின் மீது அபாண்டமாக பழி சுமத்தினால் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு தொடருவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகளின் மீது அபாண்டமாக பழி சுமத்தினால் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு தொடருவோம்.
– தொல்.திருமாவளவன். @news7tamil @sunnewstamil @News18TamilNadu @ThanthiTV @PTTVOnlineNews @bbctamil @dinathanthi @TamilTheHindu— Thol.Thirumavalavan (@thirumaofficial) May 10, 2019
திருமளவளவன் மீதும் புகார்
சில ஆண்டுகளுக்கு முன் கோவையை சேர்த்த கவிதா என்பவர், தொல் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார். அவருடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்களில் ஒருவரான வன்னியரசு பேச்சுவார்த்தை நடத்தும் காட்சியும் வெளியானது. மேலும் விடுதலை கட்சியை சேர்த்த சிலர் நாடக காதல் செய்து பணத்தை பெற்று கொண்டு பெண்களை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றம் சாட்டி இருந்தார்.
கொலையாளி வாக்குமூலம்
இந்நிலையில் விருதாச்சலம் அருகே கல்லூரி மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷ், திலகவதியை தான் தான் குத்தி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளான்.
ஆணவக்கொலையா ?
ஆகாஷின் தந்தை இதை ஆணவக் கொலையாக சித்தரித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.