1987-88ல் ஈமெயில் சேவை, டிஜிட்டல் கேமராவை பயன்படுத்திய மோடி!! உண்மையா?

1636

பிரதமர் நரேந்திர மோடி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், 1987-88 ஆண்டுகளிலே டிஜிட்டல் கேமரா மூலம் படங்கள் எடுத்து அதை இன்டர்நெட் மூலமாக அதை அத்வானி அவர்களுக்கு அனுப்பியதாக கூறினார்.

உண்மையா? பொய்யா?

இந்தியாவில் பொதுமக்களுக்கான இன்டர்நெட் சேவை 15, ஆகஸ்ட் 1995ல் தான் VSNL என்னும் அரசு நிறுவனத்தால் அறிமுக படுத்தப்பட்டது. 1986 ஆம் ஆண்டு முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் சேவை ஐஐடி போன்ற ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தன.

1991ல் தான் பொதுமக்களுக்காக அமெரிக்காவின் AOL நிறுவனம் ஈமெயில் சேவையை அறிமுகப்படுத்தியது.

பில் கிளின்டனை பின்னுக்கு தள்ளிய மோடி:

இதுவரை, உலகில் முதலில் ஈமெயில் சேவையை பயன்படுத்திய நாட்டின் தலைவர் பில் கிளின்டன் தான் என்று வரலாறு கூறிய நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது.

டிஜிட்டல் கேமரா:

1987ல் தான் முதல் டிஜிட்டல் கேமரா பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. அன்றைய விலை சுமார் 1000 அமெரிக்க டாலர்களுக்கு மேல்.

அரசியல இதல்லாம் சாதாரணமப்பா!

மேலே உள்ள தகவல் மூலம்  மோடி அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சில் கூறியது சுத்த பொய் என்பதை அனைவரும் அறியலாம். இவ்வளவு நாளாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்த மோடி, தற்போது தானாக பேட்டி கொடுக்கும் போதே சில தமிழக அமைச்சர்களை மிஞ்சிவிட்டார்.  இருதினங்களுக்கு முன்பு தான் மேக மூட்டத்தால் ராடார்களை ஏமாற்ற முடியும் என மோடி ஆலோசனை வழக்கியதாக குஜராத் பிஜேபி ட்விட்டரில் வெளியிட்டது நகைப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here