இன்று காலை 11 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது IRCTC இணையத்தளம் முடங்கியது. இணையதளம் மற்றும் மொபைல் செயலி(Mobile App)  இரண்டிலும் இருந்தும் எந்த சேவையையும் பயன்படுத்த முடியவில்லை.

பராமரிப்பு பணி காரணமாக IRCTC சேவைகளை பயன்படுத்த முடியாது, என்ற அறிவிப்பை மட்டும் இணையதளத்தில் முடங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்க முடிந்தது. ஆனால் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால் தான் IRCTC கணினிகளில் சர்வர்  முடங்கியதாக தெரிகின்றது.

முதல் வகுப்பு மற்றும்  எசி முன்பதிவில் போது 10:00 மணி முதல் 10:26 வரையும். பின் படுக்கை (Sleeper) வகுப்பின் முன்பதிவு 11:00 மணிக்கு துவங்கிய போதும் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த பிரச்சனை, காலை 11:35 மணிக்கு பிறகு சரியாகியது.  சமூக வலைத்தளங்களில் பல IRCTC பயனாளர்கள் இதுகுறித்து இந்திய ரயில்வே துறையிடம் புகார் அளித்தனர்.

பின்னோக்கி செல்கின்றதா IRCTC?

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் தான் பலரும் ஒரே நேரத்தில் டிக்கெட் பதிவு செய்யும் பொழுது தினமும் IRCTC சர்வர்காலால் இது போன்ற கணினி பிரச்சனைகள் வந்தன. தற்போது மீண்டும் இது போன்ற கணினி சர்வர் வர தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here