நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தனூர் மற்றும் மடப்புரம் கிராமங்களில் நடவுக்குத் தயாராகி இருக்கும் வயல்களில் மத்திய அரசின் கைப்பாவையாக செயல் படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் போலீஸ் பாதுகாப்போடு கெயில் குழாய்களைப் அமைக்கும் பணி நடக்கிறது.
மத்தியில் ஆளும் கட்சிக்கு பணத்தை வாரிவழங்கும் யாரோ ஒரு சில கார்பொரேட் முதலாளிகள் சம்பாரிக்க விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் அழிக்கப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் நாளைய தலைமுறைக்கு பாலைவனம் தான் மிஞ்சும்.
அநாதையான தமிழக விவசாயிகள்:
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, விவசாய நிலங்களை மட்டும் அழிக்க பாதுகாப்பு வழங்குகின்றது. காவல்த்துறையை ஆட்டுவிக்கும், பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியை போல் செயல்படும் தேர்தல் ஆணையமும் மற்றும் மத்தியில் யார் ஆண்டாளும் அவர்களுக்கு பணிய தயாராக இருக்கும் இந்த அரசே மக்களின் இந்த அவலநிலைக்கு காரணம்.
கையேந்தும் எதிர்க்கட்சி:
மேற்குவங்கத்தில் சிங்குரில் இது போன்ற நிலை வந்தப்பொழுது மக்களை திரட்டி போராடி டாடா மோட்டார்ஸ் கம்பெனியை ஓட ஓட விரட்டினார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி.
ஆனால் தமிழகத்தில், சில மக்கள் நலத்திட்டத்திற்காக இன்று விவசாய நிலங்களை அழித்து வரும் கெயில் நிறுவனத்திடம் கையேந்தி நின்றார் ஸ்டாலினுடன் நெருக்கமான டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடியின் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி ராஜா.
டி.ஆர்.பி ராஜா கெயில் நிறுவனத்திடம் நன்கொடை வாங்கும் பொழுதே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுத்தன. தற்போது திமுக இந்தப்பிரச்சனையில் மக்களுக்காக போராடும் என்று நினைத்தால், அது “இலவு காத்த கிளி” கதை போல் தான் ஆகும்.