தேனி பாராளுமன்ற உறுப்பினரானார் ஓபிஎஸ் மகன். வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டதா?

1757

தேனி மாவட்டம் குச்சனூர்  சனிஸ்வரன் கோவிலின் அருகே உள்ள தெற்கு பகுதியில் காசி அன்னபூரணி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடந்த சில வருடங்களாக ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு வந்த நிலையில் கும்பாபிஷேகமும் நேற்று நடைபெற்றது.

நேற்று வைக்கப்பட்ட கோவில் திருப்பணி தொடர்பான கல்வெட்டில், “தேனி பாராளுமன்ற உறுப்பினர் O.P. ரவீந்திரநாத்குமார்” என்று பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்.

வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டதா?

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு சாதகமாக தமிழக தேர்தல் அதிகாரி செயல்ப்படுகின்றார், என்று ஏற்கனவே எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அங்கு புதிதாக வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த கல்வெட்டு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

மாற்றப்பட்ட கல்வெட்டு:

இந்த கல்வெட்டால் சர்ச்சை ஏற்பட்ட  நிலையில் தற்போது அவசர அவசரமாக கல்வெட்டு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here