பாராளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை பெற்றாலும் தமிழக்தில் ஒரு இடம் கூட அவர்களால் பெற முடியவில்லை. இதற்கு காரணம் அவர்களின் தமிழகத்திற்கு விரோதமான பேச்சு தான் காரணம்.

அழிவு திட்டத்திற்கு முட்டுகொடுத்து அழிந்த பாஜக

தமிழகத்திற்கு பேரழிவை ஏற்ப்படுத்தும் ஹைட்ரொ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது மட்டும் இல்லாமல், ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு ஊரோ, மாநிலமோ அழிந்தால் பரவாயில்லை என்று தமிழக பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். தமிழகம் நன்றாக இருக்க பாஜக அழிந்தால் பரவாயில்லை என்று தமிழக மக்கள் இந்த தேர்தலில் தீர்ப்பளித்துள்ளனர்.

கன்னியாகுமாரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட அனைத்து  பாஜக வேட்பாளர்களும் தோல்வியை தழுவினார்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?

சாரணர் இயக்க தேர்தலில் வெறும் 52 ஓட்டுகள் மற்றும் பெற்று 180 ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற ஹச் ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைதழுவ இருக்கின்றார். இந்த தோல்விக்கு காரணம் அவருடைய வழக்கமான சர்ச்சைக்குரிய பேச்சு மட்டும் தான். அதனால் தான் ஆன்டி இந்தியன்ஸ் அனைவரும் ராஜாவிற்கு எதிராக வாக்களித்து பாராளமன்ற தேர்தலிலும் அவருக்கு தோல்வியை பரிசளித்துள்ளார்கள்.

தாமரை மலர்தே தீரும்:

தாமரை மலர்தே தீரும் என்று கனவுக்கண்ட திருமதி தமிழிசை சவுந்தர்ராஜனும் சுமார் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிகரமான தோல்வியை தழுவ உள்ளார்.

 மீனவர்களை கைவிட்ட பொன்னாரை கைவிட்ட மக்கள்

ஒக்கி புயலின் போது கன்னியாகுமரி தொகுதியில் அதிகமாக பாதிக்கப்பட்ட மீனவர்களை காப்பாற்ற போதுமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் மீனவர்கள் இருந்தனர். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் 40,000 மேற்பட்ட மீனவ வாக்காளர்களின் பெயர்  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த ஆதரவான நிலையையும் மீறி பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவ உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here