நாடாளுமன்ற தேர்தலின் பொழுது நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவினர் ‘சவுக்கிதார்’ (நாட்டின் காவலாளி) என மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என சமூக வலைத்தளங்களில் பெயரை மாற்றியிருந்தார்கள்.

நாட்டின் காவலாளி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த ‘சவுக்கிதார்’ என்ற அடைமொழியைவெற்றி பெற்ற உடன் நேற்று நீக்கினார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் அவர் கூறியதாவது, ‘ஜாதியவாதம், மதவாதம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி போன்ற தீமைகளுக்கு எதிராக இந்த நாட்டை பாதுகாக்கும் சக்திவாய்ந்த அடையாளமாக சவுக்கிதார் என்னும் சொல் உருவாகி விட்டது’.

சவுக்கிதாரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நேரம் வந்துள்ளது. சவுக்கிதார் என்ற வார்த்தை ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டதே தவிர, தொடர்ந்து மக்களின் பாதுகாவலனாகவும், நாட்டை காக்கும் முனைப்புடன் செயல்படுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சவுக்கிதரை மற்ற பாஜக பிரமுகர்களும் நீக்கும் படி கேட்டுக்கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here