தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைத்த மேஜர் முகுந்த் அவர்களின் பெற்றோர்கள் சிட்லப்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தனர். அறப்போர் இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த நற்பணியில் தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிட்லப்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தி வருகின்றனர்.
சிட்லப்பாக்கம் ஏரி:
சென்னையில் செம்பாக்கம், அஸ்தினாபுரம் அருகில் இருக்கும் ஒரு முக்கிய முதன்மை நீர்நிலையாகும். ஏரியின் மொத்த நீர் தேங்கும் பரப்பளவு 86.86 ஏக்கர் ஆகும். தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராக சுருங்கிவிட்டது. சென்னையின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது ஏரியின் நீர்மட்டம் இங்கு மேலேயே உள்ளது. இப்பகுதியில் நீர் மட்டம் 2.50 முதல் 8 மீட்டர்வரை உள்ளது. நீரில் உள்ள உப்பின் அளவு 400 முதல் 900 பிபிஎம் ஆகும்.