இன்றைய தமிழக காவல்துறை 1659 ஆண்டு பிரிட்டனின் கிழக்கு இந்திய கம்பெனியை காப்பாற்ற ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அன்று நம் மக்களை அடித்து ஒடுக்கி ஆங்கிலேய கம்பெனிகளை காப்பாற்றிய தமிழக காவல்துறையின் இந்த வரலாறு இன்றும் தொடர்கின்றது.
லண்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கும் வேதாந்தாவின் ஸ்டெர்லையிட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய மக்களை சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு படுகொலை செய்தனர். இதை திட்டமிட்ட படுகொலை என தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்த சமூக ஆர்வலர் முகிலனும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மேலும் சமூகவலைத்தளத்தில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நாராயணன் என்பவர், முகிலன் எங்கே என்ற கேள்விக்கு ‘சமாதி’ என்று பதிவிட்டுள்ளார்’.
இன்றும்?
இந்த லண்டன் வேதாந்தா நிறுவனம், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையை வாரி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை வேதாந்தா நிறுவனமும் செயல் படுத்த உள்ளது. தமிழகத்தை பாலைவனமாகும் இந்த ஹைட்ரொ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய பாரதிய ஜனதா அரசு துடிக்கின்றது. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசோ தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்த திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் மீது காவல்துறையினரை ஏவி விட்டுள்ளது.
காவல்துறை யார் பக்கம்?
கடைநிலை காவலர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இந்த திட்டத்தை எதிர்த்து பதிவிட்டு வந்தாலும் தங்களில் உயரதிகாரிகளின் உத்தரவிற்கு அடிபணியும் நிலையில் உள்ளனர். அதிகாரிகளோ ஆட்சியாளர்களின் மனம் கோணாமல், இந்த ஹைட்ரொ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க இரவு பகலாக போராடிவருகின்றனர். ஓய்வு பெரும் சில மணிநேரங்களுக்கு முன் பணி நீட்டிப்பு பெற்ற குட்கா வழக்கில் சிக்கிய டிஜிபி ராஜேந்திரன் போல் பிற சலுகைகளை பெற காவல்துறை அதிகாரிகள் விரும்ப மாட்டார்களா என்ன? ஆட்சியாளர்களின் தயவு இதற்கு தேவை.
மிரட்டும் காவல்துறை! 400 விவசாயிகள் மீது வழக்கு பதிவு?
மறைத்த முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பால் பதவி இழந்த போது, அனுமதியில்லாமல் போராடிய இதே ஆட்சியாளர்களை வேடிக்கை பார்த்த இந்த காவல்துறை, இன்று தனது வாழ்வாதாரத்தை காப்பாற்ற ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் 400 பேர் மீது அனுமதியில்லாமல் போராடியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.
இன்றும் இந்த தமிழக காவல்துறை, பொதுமக்களை விட இந்த இங்கிலாந்தை சேர்த்த வேதாந்தாவிற்கு பாதுகாப்பாக நிற்பதற்கு காரணம், சில பணம் மற்றும் பதவியாசை பிடித்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தான்.