கச்சா எண்ணெய் கசியும் பொழுது, அதை சரிச்செய்ய ஓஎன்ஜிசியிடம் உள்ள அதிநவீன எந்திரம் வாளி தான். கடலில் கச்சா எண்ணெய் கசிந்தாலும் அதையும் வாளியில் தான் அள்ளுகின்றது இந்த இந்திய அரசு.
இந்த உலகின் தலை சிறந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை ஒரத்தநாடு பகுதில் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மக்கள் அனுமதிக்க வேண்டும். இவர்கள் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தும் பொழுது கதிராமங்கலம் மற்றும் நாகப்பட்டினதில் ஏற்பட்டது போல் விபத்து ஏற்பட்டாலும் மக்கள் கவலை படத்தேவையில்லை. தங்களிடம் உள்ள அதிநவீன வாளியை வைத்து அனைத்தையும் சரி செய்வார்கள்.
சுற்றுசூழல்
சுற்றுச்சுழல் அனுமதிக்காக, அவர்களிடம் கொடுக்கப்பட்ட பேரழிவு மீட்பு திட்டதில் (disaster recovery plan) பலவற்றை குறிப்பிட்டு இருந்தாலும் இதுவரை பொதுமக்கள் பார்த்த அதிநவீன இயந்திரம் வாளி தான்.
விபச்சார வழக்கு:
தஞ்சையை துபாய் போல் ஆக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்றிய பிறகு கதிராமங்கலத்தில் ஏற்பட்டது போல் ஏதேனும் விபத்து ஏற்பட்டு மக்கள் போராடினால், கதிராமங்கலத்தில் பெண்களை விபசார வழக்கில் கைது செய்வேன் என மிரட்டிய தமிழகத்தின் மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி போல் கடமை தவறாத காவல்துறை அதிகாரி யாரேனும் வந்து தஞ்சை மக்களை துபாய் சேக் போலவும், தஞ்சையை துபாய் பாலைவனம் போலவும் மாற்ற இந்த திட்டத்திற்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.
மக்கள் அச்சத்தை போக்க என்ன வழி?
மக்களின் இந்த அச்சத்தை போக்க ஒரு மிக சுலபமான வழி இருக்கின்றது. இந்த திட்டத்தால் அதிக பயன் அடையப்போகும் வேதாந்தா அணில் அகர்வாலின் நண்பர், திரு மோடி அவர்களும், அவர் வழியில் இந்தியாவிற்காக ஒரு ஊரையோ மாநிலத்தையோ தியாகம் செய்ய தயாராக இருக்கும் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களும், இந்த திட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் தமிழக மக்களின் சாமிநம்ம எடப்பாடி பழனிச்சாமியும் தாங்கள் இருக்கும் வீட்டின் வழியாகவோ அல்லது மிக அருகில் இது போன்ற ஒரு திட்டத்தை செயல் படுத்தி மக்களின் பயத்தை போக்க வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?