உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இச்சவாரி என்னும் கிராமத்தில் மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டி குடுக்கப்பட்டுள்ளது. அந்த கழிவறைகளில் உள்ள சுவர்களில் மகாத்மா காந்தி மற்றும் தமிழக அரசின் சின்னம் உள்ள படத்துடன் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் வெளியானவுடன், மாவட்ட பஞ்சாயத்து அலுவலர் வெளிட்ட அறிக்கையில். இந்த டைல்ஸ்கள் அருகில் இருந்த சந்தைகளில் வாங்கப்பட்டதாகவும் மேலும் இது தொடர்பாக கிராம வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

13 கழிவறைகளில் இருந்து இதுபோன்ற டைல்ஸ்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் சின்னத்துடன் உள்ள டைல்ஸ் உபி சென்றது எப்படி என்பதை தமிழக அரசு விசாரிக்குமா?
Tiles with images of Mahatma Gandhi & the national emblem found plastered on the walls of the toilets made under Swachh Bharat Mission in Bulandshahr's Ichhawari village. pic.twitter.com/sB0fkuq9UG
— ANI UP (@ANINewsUP) June 5, 2019