சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது, இந்த தண்ணீர் பஞ்சத்தை போக்க தொலைநோக்கு பார்வையுடன் நமது தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் புத்திசாலித்தனமான திட்டத்தை செயல் படுத்த பணியை துவங்கியுள்ளனர்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூர் ஏரியின் ஒரு பகுதியை அழித்து காவல்நிலையம் கட்ட உள்ளனர். ஏரி கரையில் காவல்நிலையம் அமைவதால், ஏரி மீன்கள் தண்ணீரை திருடி குடித்து விடாமல் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தை குடுத்த அதிகாரிக்கும், திட்டத்தை செயல்படுத்தும் அரசுக்கும் ஐ.நா சபையின் சுற்றுசூழல் அமைப்பு விருது வழங்கி கவுரவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அதிமுக ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல ஏரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. பாதுகாக்க வேண்டிய காவல்துறை, ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுகிறது. சோழிங்கநல்லூர் (சென்னை) ஏரி பாதுகாக்கபட வேண்டும். pic.twitter.com/n0lcs1UfdH
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 6, 2019