அணுக்கழிவு தவறான தகவல் பரப்புவது தமிழக பாஜகவா? கர்நாடக பாஜகவா?

1554

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் அணுக்கழிவு குப்பைத்தொட்டியாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது. வழக்கம் போல் மத்திய பாரதிய ஜனதா அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

அணுக்கழிவு மையம் குறித்து தவறான தகவல்கள் பரப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறுகின்றார். ஆனால் இதே திட்டத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தில் அணு கழிவுகளை சேமித்து வைக்க கர்நாடக பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து, பெரிய அளவில்  போராட்டம் நடத்தியது. அப்படியென்றால் கர்நாடக பாரதிய ஜனதாவினர், தவறான தகவல்கள் பரப்பி மக்களை திசை திருப்பினார்களா?

மலராத தாமரை:

இந்தியாவை விட, சொந்த மாநிலத்தின் நன்மைக்காவே போராடும் கர்நாடக பாரதிய ஜனதாவினரை கர்நாடக மக்கள் நம்பலாம், வாக்களிக்கலம். ஆனால் நாட்டிற்காக ஒரு ஊர் அல்லது மாநிலத்தையே தியாகம் செய்ய தயாராக இருக்கும் தமிழக பாரதிய ஜனதாவினரை தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள்? இதனால் தான் தமிழகத்தில் தாமரை மலர முடியவில்லை.

தமிழகத்தில் தாமரை மலர வில்லை என்ற காரணத்தால் தான் இது போன்ற ஆபத்தான திட்டங்களை தமிழகத்தில் செயல் படுத்துகின்றதா என்று தெரியவில்லை. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் இந்த அதிமுக அரசு, தமிழக மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாததால் தான், மக்கள் எதிர்க்கும் இது போன்ற திட்டத்தை செயல் படுத்த தமிழக காவல்துறையையும், உளவு துறையையும் ஏவி போராட்டத்தை நசுக்கி வருகின்றது இந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு.

பாதுகாப்பான பாராளுமன்றம்:

ஒரு வேளை மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுவது போல், இது பாதுகாப்பான திட்டம் என்றால் பாதுகாப்பு நிறைந்த பாராளுமன்ற வளாகத்தில், அல்லது இதுவரை இந்த இந்த திட்டத்தை பற்றி வாய் திறக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்யும் தமிழக சட்டமன்றத்திலோ, அல்லது பாரதிய ஜனதாவிற்கு வாக்கு அளித்த கர்நாடக மக்களால் பயன்படுத்தப்படத்தாமல் மூடி கிடக்கும் கோலார் தங்க சுரங்கத்திலோ ஏன் இந்த கழிவுகளை சேமித்து வைக்க கூடாது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here