சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி துவங்கியது முதல் பஸ் டே கொண்டாடுவதாக, போக்குவரத்து நெரிசலையும், பொதுமக்களுக்கு இடையூரையும், சில கல்லூரிகளை சேர்த்த மாணவர்கள் ஏற்படுத்தி வருகின்றார்கள்.
நேற்று இது போன்ற ஒரு கொண்டாட்டத்தின் போது பல முட்டாள் மாணவர்கள், பேருந்துவின் மேல், முன் பகுதியில் காலை தொங்கவிட்டவாறு பயணம் செய்தனர். அந்த மூடர் கூட்டத்தை சேர்த்த இருவர் பேருந்துக்கு முன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவன் நிலை தடுமாறியதால், உடனே பிரேக்கை அழுத்தினார். இதனால் பேரூந்து முன் அமர்ந்து இருந்த முட்டாள்கள் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை. மேலும் சென்னை முழுவதும் இதுபோல் பஸ் டே கொண்டாடியவர்கள் 24 பேரை போலீஸ் பிடித்து சென்றனர். பின்னர் பலர் எச்சரிகப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டதாக தெரிகின்றது.