தமிழகத்தில் மது ஒழிப்பினைவலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருபவர் சமூக போராளி நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்துஅறவழியில் வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
2014-ல் துண்டு பிரசுரம் வழங்கியதற்காக நந்தினி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். இது சம்பந்தமான வழக்கு நேற்று திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்தது. அப்போது, வழக்கு விசாரணையின்போது, மது, போதை பொருளா, மருந்து பொருளா? போதை பொருள் என்றால் சட்டப்படி விற்கக் கூடாது. விற்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று நந்தினி நீதிபதியிடம் வாதாடினார்.
ஆனால் ஜூலை 9-ம் தேதி வரை நந்தினியையும், அவரது தந்தையையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சட்டப்போராட்டம் இதற்கு நந்தினி தரப்பில், போதை பொருள் என்றால் சட்டப்படி விற்க கூடாது. விற்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொன்னதற்கு, கேசுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இது ஒரு சட்டப்போராட்டம்.. இப்படி கோர்ட்டில் கேள்வி கேட்டுவிட்டார்கள் என்பதற்காக நீதிமன்ற அவமதிப்பு போட்டு ஜெயிலில் அடைத்துள்ளார்.
நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைப்பு..2014ல் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்கு இன்று திருப்பத்தூர்(சிவகங்கை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.குறுக்கு விசாரணையின் போது டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதை பொருளா?உணவு பொருளா? இல்லை மருந்து பொருளா?IPC 328ன் படி டாஸ்மாக் மூலம் போதை பொருள் விற்பது குற்றமில்லையா? என சட்டப்படி வாதாடியதற்க்காக ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில் அப்பா ஆனந்தன் மற்றும் நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் – குணா ஜோதிபாசு..
Posted by Nandhini Anandan on Thursday, June 27, 2019
நந்தினிக்கு திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. இது பழி வாங்குவதற்காகவே, 2014-ல் போடப்பட்ட பொய் வழக்கை இன்னைக்கு வெளியே கொண்டு வந்து, அவங்க மேல கேள்வி கேட்டாங்கன்னு ஒரு குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு நாளை முன்ஜாமீன் கோர உள்ளோம். பெயில் கிடைக்கவில்லையானால், 5-ம் தேதி நடக்க உள்ள திருமணத்தை, இன்னொரு நாள் நடத்துவோம். திருமணத்துக்கு பிறகும் நந்தினி மக்கள் போராட்டங்களை தொடர வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் திருமணமே போராட்டமா இருக்கு. இதை சந்திக்க நாங்கள் தயார்” என்கிறார்.
“நீதிமன்றமாவது மயிராவது” பேசிய ஹச்.ராஜாவிடம் பரிவு காட்டிய நீதிமன்றம், எந்த ஒரு பின்புலனும் இல்லாத பெண்ணை திருமண வேளையில் சிறையில் அடைக்க உத்திரவிட்டுள்ளதை பார்க்கும் பொழுது, “சட்டம் ஒரு சிலந்தி வலை போன்றது, இதில் ஏழைகளும், எளிவர்களும் சிக்கிக்கொள்வார்கள். ஆனால் வலியவர்களும், பணக்காரர்களும் இந்த வலையை சுக்கு நூறாக கிழித்து எறிவார்கள்” என்னும் அறிஞர்களின் வாக்கு நினைவிற்கு வருகின்றது.