ஒரு காலத்தில் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்களுக்கு இன்று கால் கடுக்க சாலை நெடுகிலும் நின்று பாதுகாப்பு அளித்துவரும் தமிழக காவல்துறை, தங்கள் அரசியல் ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்ட 10 தன்னார்வலர்களை கைது செய்துள்ளது.
அமைச்சர் வேலுமணியின் கீழ் உள்ள துறைகளின் நடக்கும் முறைகேடுகளை ஆதாரத்துடன் அம்பல படுத்திய “அறப்போர் இயக்கம்”. அந்த இயக்கத்தின் சார்பில் பெருங்குடி கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தின் தன்னார்வலர்களை கைது செய்துள்ளது எடப்பாடி அரசின் காவல்துறை.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்துக்கால்வாய் மற்றும் ஏரி நிரம்பினால் தண்ணீர் வெளியேற கூடிய போக்கு கால்வாய் இரண்டும் எந்த நிலைமையில் இருக்கின்றன என்று பார்ப்பது தான் ஆய்வின் நோக்கம். ஆய்வின் முடிவை அதற்குரிய தீர்வுகளுடன் அரசுக்கு அனுப்பி வைப்போம். ஆனால் இதற்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை என்று ஆய்வுக்கு சென்றவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
காவல்துறை யாருக்காக வேலை செய்கிறது? அமைச்சர் வேலுமணிக்கா அல்லது மக்களுக்கா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.