Representation image

அறப்போர் இயக்கம், அமைச்சர் வேலுமணி தன் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதையும், அவரின் துறையில் நடக்கும் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்க காவல்துறை தொடர்த்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றது. காவல்துறை செயல்பாடுகளை பார்த்தால் அமைச்சருக்காக தன்நிலை மறந்து செயல்ப்பட்டு வருவதாக தோன்றுகின்றது.

நிகழ்ச்சியை நடத்துவதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக காவல் துறை வழக்கு பதித்துள்ளதை அடுத்து அறப்போர் இயக்கம் வெளியிட அறிக்கையில், “Know Your Rights என்ற நிகழ்ச்சியை நடத்துவதாக சொல்லி அதை நடத்தாமல் ஏமாற்றி விட்டதாக அறப்போர் இயக்கம் மீது ஒரு பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இது ஏன் பொய் வழக்கு என்றால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய சொல்லி மண்டப உரிமையாளருக்கு எச்சரிக்கை கடிதம் கொடுத்த அதே காவல்துறை ஆய்வாளர் தான் இந்த வழக்கையும் பதிவு செய்துள்ளார்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் ஏன் இத்தனை கோபம்? மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஏன் இவ்வளவு பதட்டம்? இது போன்ற பொய் வழக்குகள் பதிவதால் அறப்போர் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிறுத்திவிடும் என்று நீங்கள் நம்புவதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

அறப்போர் Volunteers அனைவருக்கும் சென்னையின் 200 வார்டுகளிலும் Know Your Rights நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். சென்னை மாநகராட்சியில் அமைச்சர் வேலுமணி அவர்களின் ஊழல் மற்றும் தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து காவல்நிலையம் கட்டுதல் போன்ற அரசாங்கத்தின், அமைச்சர்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் உங்களுக்கு கோபம் வரும் என்றால் அதை அறப்போர் இயக்கம் தொடர்ந்து செய்யும்”. என அறிக்கையில் தெருவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here