நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்கவிழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். யானைகள் முகாமை தொடங்கி வைக்க அமைச்சர் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல் தரையில் மாட்டிக் கொண்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சிறுவனை அழைத்து அமைச்சர் கழற்றச் சொன்னார்.

அமைச்சர் கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினார். அதேபோல், அதிகாரி ஒருவரும் அதற்கு உதவினார். இந்த சம்பவம் நடந்த போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர், மற்றும் சில அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளத்தில் மக்கள் கருத்து..

ஜெ மறைவுக்கு பிறகு அமைச்சருக்கு குனிய முடியவில்லையா? என்னும் பொருள் பட பதிவிட்டுள்ளனர்.

சர்ச்சையும் சப்பைக்கட்டும்:

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவர்களை எனது பேரன் போல் நினைத்ததால் தான் அவர்களை உதவிக்கு அழைத்தேன். சிறுவர்களை காலணியை கழற்ற சொன்னதில் எந்த உள் நோக்கமும் இல்லை. பெரியவர்களை அழைத்தால் தவறாகி விடும் என்பதால் சிறுவர்களை அழைத்தேன் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here